கேரளாவில் சி.பி.ஐ-க்கு எதிராக ராகுல் காந்தி! - குழப்பத்தில் இடதுசாரிகள் | rahul gandhi to contest from kerala's wayanad creates controversy

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:07 (02/04/2019)

கேரளாவில் சி.பி.ஐ-க்கு எதிராக ராகுல் காந்தி! - குழப்பத்தில் இடதுசாரிகள்

தேர்தல் ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவார் எனக் கடந்த ஞாயிறு அன்று அந்தக் கட்சி அறிவித்தது. ஆனால், கேரளாவின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே அங்கு சுனீர் என்கிற வேட்பாளரைக் களமிறக்கியிருந்தது. இதனால், இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், “கேரளாவில் அல்லது கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருக்கும் இடங்களில் ராகுல் காந்தி போட்டியிடலாம். அவர், வயநாடு தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியைக் கூண்டோடு ஒழிப்பதுதான் எங்களுடைய நோக்கம் என்னும் நிலையில் ராகுல் காந்தி இப்படியான முடிவை எடுத்திருப்பது அதிருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. அவர் போட்டியிடுவது எங்களுக்குப் பிரச்னை இல்லை என்றாலும்,  எங்களுடைய போட்டியும் பிரசாரமும் வலுவானதாகவே இருக்கும்" என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயனும், 'ராகுல் காந்தி போட்டியிடுவதால் தங்களுக்கு பிரச்னை இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க