இந்திய ராணுவத்தில் முதன்முதலாகப் பெண்களுக்கு டிஃபன்ஸ் அட்டாஷே பதவி! | India going to recruit women officers as defence attaches post for the first time

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (01/04/2019)

கடைசி தொடர்பு:17:23 (01/04/2019)

இந்திய ராணுவத்தில் முதன்முதலாகப் பெண்களுக்கு டிஃபன்ஸ் அட்டாஷே பதவி!

ண்களுக்கான வேலை என்று எதுவும் இல்லாத வகையில், பெண்களின் பங்களிப்பு அனைத்துத் துறைகளிலும் நிறைந்துவருகிறது. குறிப்பாக, விண்வெளி மற்றும் ராணுவத்தில் பெண்களுக்கான கதவுகள் திறக்கப்படும்போதெல்லாம், அந்த உண்மை அழுத்தமாக நிரூபிக்கப்படுவதுடன் இளம் பெண்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு இன்னுமொரு வாசல் திறந்திருக்கிறது. பெண் அதிகாரிகளை டிஃபன்ஸ் அட்டாஷே(Defence Attache') ஆகப் பணியமர்த்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியத் தூதரகங்களில் ஆயுதப்படையின் பிரதிநிதியாக ஓர் அதிகாரி, தூதரக அதிகாரி அல்லது அமைச்சருக்குக் கீழ் அசைன் செய்யப்படுவார். இவரே டிஃபன்ஸ் அட்டாஷே. ராணுவப் பொறுப்புகளால் கட்டமைக்கப்பட்ட இந்தப் பதவியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்துவந்த சூழலில், முப்படைகளிலும் டிஃபன்ஸ் அட்டாஷே பதவிக்கான பெண் அதிகாரிகளின் பரிந்துரைப் பட்டியலை அரசு கேட்டிருக்கிறது. 

ராணுவம்

ஏற்கெனவே இந்திய ராணுவத்தில், சிக்னல்ஸ், ஆர்மி ஏவியேஷன், ஆர்மி ஏர் டிஃபன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயர்ஸ், ஆர்மி சர்வீஸ், ஆர்மி ஆர்டினன்ஸ் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். சமீபத்தில் ஃபைட்டர் பைலட் பணிக்கும் பெண் அதிகாரிகள் வாய்ப்பு பெற்றனர். இதன் மூலம் IAF-ன் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களும் பணியாற்றக்கூடிய பெருமை கிட்டியது. பெண்களின் பங்களிப்பு நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் அதிகரித்துக்கொண்டே வருவது, கொண்டாடப்பட வேண்டிய தருணம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க