“ஒரு கையொப்பம்; திருமண நாளில் காத்திருந்த அதிர்ச்சி” - நீதிமன்றத்தை நாடிய இளம்பெண் | Minutes After Wedding Groom Tricks bride In To Taking Virginity Test

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (01/04/2019)

கடைசி தொடர்பு:18:22 (01/04/2019)

“ஒரு கையொப்பம்; திருமண நாளில் காத்திருந்த அதிர்ச்சி” - நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்

திருமணம் முடிந்த சில மணி நேரத்திற்குள், மணப்பெண்ணுக்கு கணவன், கன்னித்தன்மையை சோதனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

வட கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர் ஷரத். எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.ஏ பட்டதாரியான ரக்ஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. மேட்ரிமோனி இணையதளம் மூலம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். கல்யாணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், இருவரும் சமீபத்தில் விவாகரத்து வேண்டுமென கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மூன்றே மாதங்களில் விவாகரத்து ஏன் என கேள்வி எழும்பவே, இதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு 15 நாள்களுக்கு முன், மணப்பெண் ரக்ஸாவின் தாயார் கேன்சர் நோயால் உயிரிழந்துவிட்டார்.  இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரக்ஸா, திருமணத்தின்போது சோகமாகவே இருந்துள்ளார். ஆனால், அவருக்குக் கல்யாணத்தின்மீது விருப்பமில்லை என்பதுபோல ஷரத் தவறாக எண்ணியுள்ளார். 

திருமணம்

இதேபோல, திருமண நாளன்று  ரக்ஸா வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் ஷரத். இரைப்பை அலர்ஜி காரணமாகவே அவர் வாந்தி எடுத்தது தெரியவந்தது. அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சில படிவங்களைப் படித்துப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுள்ளார் ரக்ஸா. அதன்பிறகு நடந்த சம்பவம் அதிர்ச்சி ரகம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கன்னித்தன்மை சோதனையும், கருத்தரிப்பு பரிசோதனைகளும் செய்தனர். அப்போதுதான் எதற்காக மருத்துவர்கள் படிவங்களில் கையொப்பம் பெற்றார்கள் என்பது அவருக்குப் புரியவந்தது. கணவர் ஷரத் தான் இந்தச் சோதனைகளை செய்யச் சொன்னதும், தன்னை ஏமாற்றி இந்தச் சோதனைகளைச் செய்ததும் அவருக்குத் தெரிய வந்தது.

விவாகரத்து

உடனே அங்கிருந்து வெளியேறிய ரக்ஸா, தனது சகோதரி வீட்டுக்குச் சென்றார். அங்கேயே தற்போது தங்கியுள்ளார். இதற்கிடையே, மூன்று மாதங்களுக்குப் பிறகு ரக்ஸா, தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக ஷரத்துக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஷரத் கவுன்சலிங் கொடுப்பவர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

news credits: indiatimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க