``வாவ்... அற்புதமான காட்சி!” - சீறிச் செல்லும் ராக்கெட்டை விமானத்திலிருந்து படம்பிடித்த விமானி | PSLV launch caught from Indigo Flight

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (01/04/2019)

கடைசி தொடர்பு:18:23 (01/04/2019)

``வாவ்... அற்புதமான காட்சி!” - சீறிச் செல்லும் ராக்கெட்டை விமானத்திலிருந்து படம்பிடித்த விமானி

ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் காலை 9.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் 3 வெவ்வேறு படிநிலைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இதில், 24 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவையும் லித்துவேனியாவைச் சேர்ந்த 2 செயற்கைக்கோள்களும் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இடம்பெற்றிருக்கின்றன. 

பி.எஸ்.எல்.வி

Photo Credit: ISRO

இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ செம வைரலானது. பூமியிலிருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை விமானி ஒருவர் படம் பிடித்திருக்கிறார். இண்டிகோ விமானத்திலிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதை  எடுத்தவர் அந்த விமானத்தின் விமானி கேப்டன் கருண் கரும்பாயா. சீறிச் செல்லும் ராக்கெட்டிலிருந்து சுமார் 50 நாட்டிகல் மைல் தூரத்தில் விமானத்திலிருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் விமானி பயணிகளிடம் இதுதொடர்பாக, ``லேடீஸ் அண்ட்  ஜென்டில்மேன், வலதுபுறம் ஜன்னல் வழியாக நீங்கள்  பி.எஸ்.எல்.வி ராக்கெட் செல்வதை காணலாம்” என்கிறார். மேலும் இந்தக் காட்சியைக் காணும் அவரின் கோ பைலட்டும், ``பியூட்டி.... வாவ்... இது ஒரு அற்புதமான காட்சி” என்கிறார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.