வயநாட்டில் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல்செய்கிறார் ராகுல் காந்தி ! | Rahul may file in vayanad nomination on April 4...

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:10 (02/04/2019)

வயநாட்டில் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல்செய்கிறார் ராகுல் காந்தி !

 

ராகுல் காந்தி

கில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடப்போவதாக, கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் தொண்டர்கள் பேசிவருகின்றனர். அதோடு, கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் "RAGA WAYANAD"  என்ற (ஸ்லோகத்தை) முழக்கத்தை எழுப்பியதோடு, அங்கு போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு ஏற்றவாறு , ராகுல் காந்தியின் போஸ்டர்கள்,  கட் அவுட்களும் வயநாட்டை ஆக்கிரமித்திருந்த நிலையில், அமேதியைத் தொடர்ந்து அவர் வயநாட்டிலும்  போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. 

கேரளாவில், வரும் 4 -ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி என்பதால், அன்றே  ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, கேரளாவுக்கு  ராகுல் காந்தி வரக்கூடும் என்பதால், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பு  மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு பாதுகாப்புக் குழு இன்று கேரளா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது