முதல்முறையாக விமானம் தாமதமாக புறப்பட்டதற்காகப் பாராட்டப்படும் ஏர் இந்தியா! | Air India crew delays flight for elderly passenger

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:07:00 (03/04/2019)

முதல்முறையாக விமானம் தாமதமாக புறப்பட்டதற்காகப் பாராட்டப்படும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியாவுக்குக் கடந்த சில நாள்களாக ட்விட்டரில் பாராட்டு மழையாகக் கொட்டுகிறது. பொதுவாக `விமானம் வர தாமதமாகிவிட்டது’, `விமானத்தில் சர்வீஸ் சரியில்லை’ என்றெல்லாம்தான் ட்விட்டரில் விமான சேவை நிறுவனங்களைக் கரைத்து கொட்டுவார்கள். ஆனால் முதல் முறையாக விமானம் தாமதமாகப் புறப்பட்டதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஏர் இந்தியா

கடந்த மார்ச் 31 ம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால், விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. பயணிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஏர் இந்தியா

ஒரு வயது முதிர்ந்த பெண் பயணி தன் பையை விமான நிலையத்தின் செக்யூரிட்டி ரூமில் தவறவிட்டிருக்கிறார். அந்தப் பையில்தான் தன் பாஸ்போர்ட்டையும் பிற அடையாள அட்டையையும் வைத்திருந்துள்ளார். இந்த விஷயம் விமானிகளுக்குத் தெரிந்ததும், விமானத்தை நிறுத்தி வைத்துள்ளனர். விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணின் பையைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இதனையடுத்து விமானம் புறப்பட்டுள்ளது. அதே விமானத்தில்தான் மூத்த பத்திகையாளர் ஒருவரும் பயணித்துள்ளார். அவர் நடந்தவற்றை தன் ட்விட்டரில் பகிர, ஏர் இந்தியா விமானத்துக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க