``கோழிக்குஞ்சை எப்படியாவது காப்பாத்திடுங்க டாக்டர்!''- கண்கலங்க வைத்த சிறுவன் | boy accidentally runs over chicken, takes it to hospital in mizoram

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (04/04/2019)

கடைசி தொடர்பு:09:30 (05/04/2019)

``கோழிக்குஞ்சை எப்படியாவது காப்பாத்திடுங்க டாக்டர்!''- கண்கலங்க வைத்த சிறுவன்

இரு நாள்களாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிக் கொண்டிருந்தது. ஒரு கையில் கோழிக்குஞ்சும் மற்றொரு கையில் பணத்துடன் சிறுவன் ஒருவன் பரிதாபத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் அது. தற்போது, அந்தப் புகைப்படத்துக்கு விளக்கம் கிடைத்துள்ளது. 

கோழிக்குஞ்சுடன் மிசோரம் சிறுவன்

மிசோரம் மாநிலம் சைரங் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவன் தன் வீட்டருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, பக்கத்து வீட்டுக் கோழிக்குஞ்சு சைக்கிளுக்குக் குறுக்கே பாய்ந்து அடிபட்டு விட்டது. இதனால், பதறிப் போன சிறுவன், உடனடியாக தான் வைத்திருந்த பணத்துடன் கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ஓடியுள்ளான். அங்கே, சென்று கையில் வைத்திருந்த கோழிக்குஞ்சைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டியுள்ளான். கையில் பணம், கோழிக்குஞ்சுடன் இருக்கும் புகைப்படத்தை சங்கா என்பவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தப் புகைப்படம் ஒரு லட்சத்துக்கு மேல் லைக்குகளைக் குவித்துள்ளது. 85,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. கோழிக்குஞ்சை சிறுவன் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியதைப் போல பெரியவர்களும் சாலை விபத்தில் யாராவது சிக்கினால், உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே இந்தப் புகைப்படம் சொல்லும் செய்தி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க