பாம்பைக் கொல்ல கரும்புத் தோட்டத்துக்கு தீ வைப்பு! - 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாப பலி | 5 leopard cubs die in farm waste fire in maharastra

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (04/04/2019)

பாம்பைக் கொல்ல கரும்புத் தோட்டத்துக்கு தீ வைப்பு! - 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாப பலி

பாம்பைக் கொல்ல கரும்புத் தோட்டத்துக்குத் தீ வைத்ததால், உள்ளேயிருந்த 5 சிறுத்தைக் குட்டிகள் தீயில் கருகி பலியாகின. 

சிறுத்தைக் குட்டிகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள அவ்சாரி கிராமத்தில் கரும்பு அறுவடைக்குத் தொழிலாளர்கள் வந்துள்ளனர். கரும்புத் தோட்டத்துக்குள் இருந்து சரசரவென சத்தம் வந்துள்ளது. பாம்பு என நினைத்துப் பயந்துபோன தொழிலாளர்கள் கரும்புத் தோட்டத்தில் சத்தம் வந்த பகுதியில் தீ வைத்துள்ளனர். ஆனால், உள்ளே சிறுத்தைக் குட்டிகள் இருந்துள்ளன. தீயில் சிக்கி 5  குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சமயத்தில் தாய் வேட்டைக்குச் சென்றதால் தப்பித்தது. வனத்துறையினர் குட்டிகளின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்டிகள்  பலியான விவசாய நிலத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குட்டிகளைக் காணாததால் தாய் சிறுத்தை மூர்க்கமடைந்து மனிதர்களைத் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  ``சிறுத்தைகள் கரும்புத் தோட்டத்துக்குள் குட்டிகளை ஈன்று வளர்ப்பது வழக்கமானது. குட்டிகள் நன்றாக பலம் பெற்ற பின்னரே, தாய் அவற்றைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லும். கடந்த மார்ச் மாதத்தில் இதே பகுதியில் கரும்புத் தோட்டத்திலிருந்து இரு குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க