வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரிகள் போட்டி ஏன்?- கே.பாலகிருஷ்ணன் பதில் | Why are the left parties competitive against Rahul Gandhi in Wayanad constituency -says K.Balakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:55 (06/04/2019)

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரிகள் போட்டி ஏன்?- கே.பாலகிருஷ்ணன் பதில்

 

ராகுல் காந்தி  காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் இடதுசாரிக் கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பதற்கு சி.பி.எம். தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் கே.பாலகிருஷ்ணன். அப்போது, ``தமிழகம் உட்பட நாடு முழுவதும் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை எதிர்த்தே இடதுசாரிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில்தான், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி மதவாதக் கூட்டணி என்று சொல்கிறோம். இங்கே மதவாதக் கூட்டணிக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. அந்த வகையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து பா.ஜ.க-வை எதிர்க்கிறோம். 

பாலகிருஷ்ணன் சி.பி .எம்

கேரளாவைப் பொறுத்தவரை, இயல்பாகவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. அந்த வகையில், அந்த மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் வெற்றிபெறப்போவது மதச்சார்பற்ற கட்சிகள்தான். காங்கிரஸ் என்றாலும், இடதுசாரிக் கட்சிகள் என்றாலும் மதச்சார்பற்ற கட்சிகளே வெற்றிபெறும் என்பதே கேரளாவில் உள்ள நிலைமை. அங்கு பா.ஜ.க. தனி சக்தியாகக் காலூன்ற முயல்கிறது. என்றாலும், அந்தக் கட்சிக்கு கேரளாவில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை" என்றார்.

எனினும், வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரிகள் போட்டியிடுவது பற்றி அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. எனவே, கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு, தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் என்ற நிலை உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க