"உங்களுடைய கதாநாயகி யார்?"- மாணவர்களின் கேள்விக்கு ராகுல் சுவாரஸ்ய பதில்  | Rahul Gandhi Replied Who Should Be Heroine In His Biopic

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (05/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (05/04/2019)

  "உங்களுடைய கதாநாயகி யார்?"- மாணவர்களின் கேள்விக்கு ராகுல் சுவாரஸ்ய பதில் 

ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தல், வரும் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. நட்சத்திர வேட்பாளர்களான பிரதமர் மோடி வாரணாசியிலும்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டிலும் வேட்புமனு தாக்கல்செய்து, தங்களது சூறாவளி சுற்றுப் பயண பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புனே-யில் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார்.  அப்போது பிரசாரத்திற்கு நடுவே மாணவர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இருந்தது. அந்த உரையாடலில், மாணவர்களுடன் பேசினார். அப்போது  மாணவர்கள், " உங்கள்  வாழ்க்கை முறை பற்றி வெளியாகும் திரைப்படத்தில் உங்களுடைய கதாநாயகி யார்?'' என்று கேள்வி எழுப்பினர்.

 

ராகுல் காந்தி  வேட்பு மனு தாக்கல்

இப்படியான  கேள்வியை சற்றும் எதிர்பாராத ராகுல், "எனது வேலையை நான் திருமணம் செய்துகொண்டேன்" என்றார். அதோடு, எனது தங்கையே எனது நெருங்கிய தோழி ஆவார்" என்றார். அவருடைய இந்த பதிலைப் போன்று பிரியங்கா காந்தியும் "எனது சகோதரன் எனது உண்மையான நண்பன்" என்று ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடன் ட்விட் செய்திருந்தார் 

ராகுல் காந்தியின் திருமண வாழ்வுகுறித்து  அவரிடம்  மாணவிகள் கேட்டதைப் போன்று,செய்தியாளர்களும் இதே கேள்வியை எழுப்பி யிருந்தனர். அதற்கு ராகுல் காந்தி, "எனது கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சியை நான் திருமணம் செய்துகொண்டேன்" என்று பதில் அளித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.