493 வேட்பாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்த தேர்தல் ஆணையம்! | election commission banned 493 candidate

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:20:15 (05/04/2019)

493 வேட்பாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்த தேர்தல் ஆணையம்!

த்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 493 வேட்பாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் பங்கேற்கத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசமாகும். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பி.ஜே.பியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தேர்தல் முடிந்த பிறகு வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

யோகி ஆதித்தியநாத்

உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கியும் சமர்ப்பிக்காத 493 வேட்பாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் பங்கேற்கத் தடை  விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக முசாபர் மாவட்டத்தில் மட்டும் 6 வேட்பாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முசாபர் நகர்

இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய், ``கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான செலவுக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யாததால்தான் 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.