`இந்தியா கைம்மாறு செய்யும்!' - 360 பேரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் நம்பிக்கை | Pakistan to release 360 Indian prisoners

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:11:30 (06/04/2019)

`இந்தியா கைம்மாறு செய்யும்!' - 360 பேரை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் நம்பிக்கை

ல்லெண்ண அடிப்படையில் 360 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 

பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள்

இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செய்தி தொடர்பாளர் மொகமது ஃபைசல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்தியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கிறோம். ஏப்ரல் 8-ம் தேதி முதல் கட்டமாக 100 பேரும் 15-ம் தேதி 100 பேரும் 22-ம் தேதி 100 பேரும் 29-ம் தேதி மீதியுள்ள 60 பேரும் விடுவிக்கப்படுவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். எங்கள் நல்லெண்ணத்துக்கு இந்தியா கைம்மாறு செய்யும் என்று நம்புகிறோம். இந்தியாவில் 347 பாகிஸ்தானியர்கள் சிறைப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இன்னும் 537 இந்தியர்கள் சிறையில் உள்ளனர்'' என்று தெரிவித்தார்.

விடுவிக்கப்படவுள்ள இந்தியர்களில் 355 பேர் மீனவர்கள். தற்போது கராச்சி சிறையில் உள்ள இவர்கள், லாகூருக்குக் கொண்டு செல்லப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்திய மீனவர்களை விடுவிக்க Edhi welfare organisation என்ற அமைப்பு தீவிரமாக பாடுபட்டது.

இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அன்வர் காஷ்மி, `இந்தியர்களை விடுவிக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விடும். திங்கள் கிழமை அல்மா இக்பால் எக்ஸ்பிரஸ் ரயிலில் லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார்கள். விடுவிக்கப்படும் கைதிகளுக்குத் தேவையான உணவு, உடைகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார்.

இந்தியா, பாகிஸ்தான் கடற்படையினர் அரபிக் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இரு நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும்  மாறி மாறி கைது செய்து வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க