குடிமைப்பணிக்குத் தேர்வான கேரளாவின் முதல் பழங்குடிப் பெண் - ராகுல் காந்தி பாராட்டு! | Rahul Gandhi congratulates Kerala's first Tribal woman who passed the Civil Service Exam

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (06/04/2019)

கடைசி தொடர்பு:13:15 (06/04/2019)

குடிமைப்பணிக்குத் தேர்வான கேரளாவின் முதல் பழங்குடிப் பெண் - ராகுல் காந்தி பாராட்டு!

கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த பழங்குடி மாணவி ஒருவர் முதல்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் (குடிமைப் பணி) தேர்ச்சி பெற்றிருக்கிறார். பெயர் ஶ்ரீதன்யா.  22 வயதான இந்த மாணவி இந்திய அளவில் 410 -வது ரேங்க் பெற்றிருக்கிறார். இவருடன் சேர்த்து கேரளாவிலிருந்து மொத்தம் 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் ஶ்ரீதன்யா மட்டும்தான் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்.  ``சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறார் ஶ்ரீதன்யா. அவருடைய சாதனை வருங்காலத்தில் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் இருக்கிறது'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டிவிட்ட நிலையில், இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் மாணவி ஶ்ரீதன்யாவைப் பாராட்டியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. 

ஶ்ரீதன்யா

ராகுல் காந்தி ட்விட்

அதில், ``வயநாட்டைச் சேர்ந்த முதல் பழங்குடியினப் பெண் சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வாகியிருக்கிறார். ஶ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அவருடைய கனவு நனவாகி இருப்பதற்கான காரணம். ஶ்ரீதன்யாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என் வாழ்த்துகள். தான் தேர்ந்தெடுத்த பணியில் அவர் நிறைய வெற்றிகள் பெறட்டும்'' என்று வாழ்த்தியிருக்கிறார் ராகுல் காந்தி.