``கவனமாகப் பேசுங்கள்!" - யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!  | election commission Warns Yogi Adityanath

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (06/04/2019)

 ``கவனமாகப் பேசுங்கள்!" - யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! 

ந்திய ராணுவம் மோடியின் சேனையாக உள்ளது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசிய விவகாரத்தில்  அவருக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. 

யோகி  ஆதியத் நாத்

 உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது, `காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்குப் பிரியாணிதான் வழங்குவார்கள். ஆனால், பிரதமர் மோடி வெடிகுண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் வழங்கக் கூடியவர். அதோடு இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக  உள்ளது” என்று பேசியிருந்தார்.அவருடைய இந்தப் பேச்சு தேர்தல் விதிகளை மீறிய பேச்சு என்று காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.

தேர்தல் ஆணையம்

அந்தப் புகார் குறித்து யோகி ஆதித்யநாத் பேசிய வீடியோவையும் கேட்டது தேர்தல் ஆணையம். இதைத் தொடர்ந்து வீடியோ அனுப்பப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்த யோகி ஆதித்யநாத்தின் கடிதத்தை ஏற்காமல் அவருடைய பேச்சைக் கண்டித்துள்ளது. `எதிர்காலத்தில் இவ்வாறு யோகி ஆதியத் நாத் பேசக் கூடாது கவனமாகப் பேச வேண்டும்' என்று கூறியுள்ளது.