நெருக்கும் வாராக்கடன்! - இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸுடன் இணையும் லஷ்மி விலாஸ் வங்கி | Lakshmi Vilas Bank merger with India Bulls

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (06/04/2019)

நெருக்கும் வாராக்கடன்! - இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸுடன் இணையும் லஷ்மி விலாஸ் வங்கி

லஷ்மி விலாஸ் வங்கி, கரூரைச் சேர்ந்த வி.எஸ்.என்.ராமலிங்கச் செட்டியாரின் தலைமையில் ஏழு வணிகர்கள் இணைந்து சுதந்திரத்திற்கும் முன்னர், 1926ல் தொடங்கியதாகும். கரூரைச் சுற்றியுள்ள வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடனுதவி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த 93 ஆண்டுகள் பழமையான லஷ்மி விலாஸ் வங்கியுடன், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் இணைய உள்ளது. இணைந்தபின், 'இந்தியாபுல்ஸ் லஷ்மி விலாஸ் வங்கி' என்று அழைக்கப்படும். புதிய வங்கியின் தலைமையகம் மும்பைக்கு மாற்றப்படும்.

லஷ்மி விலாஸ் வங்கி, கரூரைச் சேர்ந்த வி.எஸ்.என்.ராமலிங்கச் செட்டியாரின் தலைமையில் ஏழு வணிகர்கள் இணைந்து சுதந்திரத்திற்கும் முன்னர், 1926ல் தொடங்கியதாகும். கரூரைச் சுற்றியுள்ள வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் கடனுதவி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. சிங் சகோதரர்களுக்கு ரூ.720 கோடி வங்கிக்கடன் கொடுத்ததில் வாராக்கடன் பிரச்னையில் சிக்கியதிலிருந்தே கடந்த இரண்டாண்டுகளாகப் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக வருமான இழப்பைச் சந்தித்துவந்தது. 

லஷ்மி விலாஸ் வங்கி

இந்த இணைப்புகுறித்து லஷ்மி விலாஸ் வங்கியின் தலைவர் குறிப்பிடுகையில், 'எங்களுக்குப் பணக்கார பெற்றோரைக் கண்டுபிடித்துவிட்டோம்' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இனி, இணைக்கப்பட்ட புதிய வங்கியின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்குமென்று நம்பிக்கை தெரிவித்தார். கரூரைத் தலைமையிடமாகக்கொண்டு தொடங்கப்பட்ட கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் லஷ்மி விலாஸ் வங்கியில் தற்போது, கரூர் வைஸ்யா பேங்க் மட்டுமே தொடர்ந்து இயங்கிவருகிறது.