கைகொடுத்த ஒரு ரூபாய் க்ளினிக் - ரயில் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி | Woman delivers baby at Thane railway station

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (07/04/2019)

கடைசி தொடர்பு:10:20 (07/04/2019)

கைகொடுத்த ஒரு ரூபாய் க்ளினிக் - ரயில் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி

மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கர்ப்பிணி

Credits: ANI


மகாராஷ்டிரா மாநிலம் அம்பிவாலி பகுதியைச் சேர்ந்தவர் இஷ்ரத் ஷேக். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று லேசான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்வதற்காக தனது உறவினருடன் மாலை அம்பிவாலி பகுதியில் இருந்து குர்லாவுக்கு விரைவு ரயிலில் சென்றுள்ளார். ரயில் தானே ரயில் நிலையத்தை அடைந்த போது இஷ்ரத்துக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே காவலர் உடனடியாக ரயில்நிலையத்தில் இருந்து ஒரு ரூபாய் க்ளினிக்கிற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஸ்டெரெச்சர் போன்றவற்றை உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ரயிலானது 6வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. க்ளினிக் 2-வது நடைமேடை பகுதியில் அமைந்திருந்தது. ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களின் உதவியோடு அங்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிரசவம் பார்ப்பதற்கான தேவையான மருத்துவ உபகரணங்களை விரைவாகத் தயார் செய்தனர். சுமார் 6.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். மேல்சிகிச்சைக்காக இருவரும் தானேவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

இதுகுறித்து பேசிய ஒரு ரூபாய் கிளினிக்கின் தலைமை செயல் அதிகாரி, டாக்டர். ராகுல் குலே, ரயில் நிலையத்தில் க்ளினிக் நடத்த அனுமதியளித்த ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி. ஒரு ரூபாய் க்ளினிக்கில் வெற்றிகரமாக நடந்த 3வது பிரசவம் இது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.