கமல்நாத்தை குறி வைத்து ஐடி ரெய்டு? - மத்திய பிரதேசத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் | I-T dept is conducting searches at 50 locations all over india

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (07/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (07/04/2019)

கமல்நாத்தை குறி வைத்து ஐடி ரெய்டு? - மத்திய பிரதேசத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

மத்திய பிரதேச முதல்வரின் செயலாளர் வீடு உட்பட நாடு முழுவதும் 50 இடங்களுக்கு மேல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 

வேலூர் நாடாளுமமன்றத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை குறி வைத்து சமீபத்தில் அவரது வீட்டிலும், அதேபோல் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இத பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் செயலாளர் வீடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

மத்தியப் பிரதேசம், டெல்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வருமானவரித்துறையினர் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. இதில் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் வீடும் தப்பவில்லை. 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதேபோல் கமல்நாத்தின் ஆடிட்டர் பிரதிக் ஜோஷி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல சூட்கேசில் இருந்த கட்டுக்கட்டாக பணத்தை வருவமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க