`ஃபேஸ்புக் நட்பு; மூன்றுவருடக் காதல்..ஆனால்!' - காதலியைக் கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற காதலன் வாக்குமூலம் | lover stabbed girl student in kerala for refusing marriage

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (07/04/2019)

கடைசி தொடர்பு:16:59 (07/04/2019)

`ஃபேஸ்புக் நட்பு; மூன்றுவருடக் காதல்..ஆனால்!' - காதலியைக் கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற காதலன் வாக்குமூலம்

திருச்சூர் மாவட்டம் செய்யாரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நீத்து. இவர், திருச்சூரில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பைனல் இயர் படித்து வந்துள்ளார். நீத்துவை நித்தீஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஆவார். நீத்துவின் தாயார் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டதால், மாமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். நீத்துவின் வீட்டுக்கு நேற்று வந்த நித்தீஷ் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. 

நித்திஷ்

அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, நீத்து ரத்த வெள்ளத்தில் தீயில் கருகிக் கிடந்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் நித்திஷைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நித்திஷின் பையில் இருந்த விஷப் பாட்டிலையும் கைப்பற்றினர். காதலியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்பது நித்திஷின் எண்ணமாக இருந்துள்ளது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த கொலை குறித்து நித்திஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பேஸ்புக் மூலம் தான் இருவருக்கும் பழக்கம் ஆரம்பித்தது. நீத்துவும் நித்திஷும் மூன்று வருடமாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இது அவர்களின் இரு குடும்பத்துக்கும் தெரியும். நீத்துவின் வீட்டில் தான் நித்திஷ் அடிக்கடி இருந்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று வருடம் ஒன்றாக இருந்துள்ளார். இருவருக்கும் பயணங்கள் பிடிக்கும். பைக் பிரியர்களும் கூட. 

இதுபோன்ற பல ஒற்றுமைகள் அவர்களை நெருக்கமாக்கியுள்ளது. சமீபத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யலாம் நித்திஷ் கூறியுள்ளான். ஆனால்  அதற்கு நீத்து சம்மதம் தெரிவிக்கவில்லை. படித்து முடித்து நல்ல வேலைக் கிடைத்த பின் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ளார் நித்திஷ். அவர் வேறு யாரையும் காதலிக்கிறாரா என்ற சந்தேகத்தில் அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த சண்டையில் நீட்டிக்கவே இதுகுறித்து மீண்டும் ஒரு முறை நீத்துவிடம் பேசிப் பார்க்கலாம் என்றும், மீண்டும் கல்யாணத்துக்கு நீத்து சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அவரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணுடத்துடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதற்காக ஆன்லைனில் கத்தி வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். 

நித்திஷ்

நீத்துவின் வீட்டுக்குச் சென்றவர் கத்தியுடன் விஷமும், தனது பைக்கில் இருந்து பெட்ரோலையும் பிடித்துச் சென்றுள்ளார். அங்கு நித்திஷை பேசி சமாதானம் செய்துள்ளார் நீத்து. இதில் மனமும் மாறியுள்ளார். இதனால் வீட்டை விட்டுக் கிளம்பி சென்றுள்ளார். ஆனால் வீட்டின் வெளியே நீத்துவின் பாட்டி வெளியே நிற்க மீண்டும் அவரது ரூமுக்கே வந்துள்ளார். அந்த நேரம் நீத்துக் குளிக்க செல்லச் சந்தேகத்தில் அவரின் போனை சோதனை செய்துள்ளான் அவன். அதில் சந்தேகத்துக்குரிய வகையில் நீத்து தொடர்ச்சியாக ஒரு நம்பரில் பேசியுள்ளதும், சாட் செய்ததும் தெரிய வர அவர் குளித்து முடித்து வெளியே வரவும் அவரைச் சரமாரியாக கழுத்தில் குத்தியுள்ளார். பின்னர் தான் கொண்டுவந்த பெட்ரோலால் நீத்துவை எரித்துவிட்டு தானும் விஷம் குடிக்க முயன்றுள்ளான். ஆனால் தீ வைத்ததில் நீத்து அலறப் பதற்றத்தில் வீட்டை வெளியேறியுள்ளான். அந்த நேரத்தில் மக்கள் அவனைப் பிடித்துவிட்டனர்" எனக் கூறியுள்ளனர்.

சந்தேகத்தால் நீத்துவின் மீது தீ வைப்பதற்கு முன் 12 முறை அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க நீத்து முயற்சிக்க கைகளிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க