`443 கோடி ரூபாய்!’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா | Air India has so far billed Rs 443.4 crore for PM Modi’s official foreign visits

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (08/04/2019)

`443 கோடி ரூபாய்!’ - பிரதமரின் வெளிநாடு பயணத்துக்கான `பில்’லை அனுப்பிய ஏர் இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு ட்ரிப்புக்காக 443 கோடி ரூபாய் பில் அனுப்பியுள்ளது ஏர் இந்தியா.

பிரதமர் மோடி

மோடி 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார். பிரதமராகப் பதவி ஏற்றத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்தும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. பிரதமராகப் பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவிட்டது. இதன் பிறகு இந்தப் பட்டியல் நீண்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க இதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை. நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என மத்தியில் ஆளும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. 

மோடி

இதற்கிடையே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா விமானம் நிறுவனம். அதில், 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 ட்ரிப்புகளாகச் சென்றுள்ளார். ஒரே ட்ரிப்பில் ஆறு நாடுகளுக்கு மேல் சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது எனப் பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது எனப் பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது. முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.493 கோடி மத்திய அரசு செலவிடப்பட்டுள்ளது. அவர் 5 வருடத்தில் 38 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.

மோடி

மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 44 ட்ரிப்புக்களைத் தாண்டி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்தது, ஒரே ட்ரிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்குச் செல்வது என்பது போன்றது காரணமாகவே ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க