சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் பா.ஜ.க - திரிணாமுல் காங்கிரஸ்! | Trinamool, BJP clash in Social Media

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (08/04/2019)

சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளும் பா.ஜ.க - திரிணாமுல் காங்கிரஸ்!

 

மோடி - மம்தா

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும், சமூக வலைதள மோதல்கள் வலுத்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல், வரும் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பொதுக் கூட்டங்கள், பேரணி, நடைப்பயணம் என மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. 

அதே நேரத்தில் கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சித்துப் பேசுவதும், அதற்குப் பதில் கவுண்டர் கொடுப்பதும் எனத் தேர்தல் களம் அதகளமாகியுள்ளது. இப்படி மக்களைச் சந்திக்கும் நேரடி பிரசாரம் ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களிலும் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் பா.ஜ.க-வும்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. குறிப்பாகப் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து திரிணாமுல் காங்கிரஸ்  வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பா.ஜ.கவும் பதிலடி கொடுத்து வருகிறது. நாள்தோறும் வீடியோக்கள், பாடல்கள் என இந்த இருகட்சிகளும் மாறி மாறி  வெளியிட்டு மோதலில் இறங்கியுள்ளன..    

தேர்தல் - பா.ஜ.க-வின் ஸ்லோகம்

அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உம்லா மெட்ரி (umla metre") மற்றும் பிரதான் மந்திர ஹிஷாப் டூ ( Pradhan mantri hisab do") ஆகிய வீடியோவும் பா.ஜ.க-வின் மெயின் பீ சவுகிதார் "Main Bhi Chowkidar"ன் என்ற வீடியோவும்  வைரலாகி வருகின்றன. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (Pradhan mantri hisab do") `பிரதமரே இதற்குப் பதில் சொல்லுங்கள்' `உம்லா மெட்ரி' (umla metre)  போன்ற வீடியோக்கள் பா.ஜ.க-வை பலமாக எதிர்ப்பதோடு, அதிகமான மக்களிடையே சென்றடைந்துள்ளது. அதேபோன்று பா.ஜ.க-வின் "Main Bhi Chowkidar"ன் என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாளது 

இப்படி இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சித்து நாள்தோறும் வீடியோக்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ்அப், மெயில் போன்றவற்றில் பதிவிட்டு வருகின்றன. இதனால் இரு தரப்புக்கும் இடையேயான சமூக வலைதள மோதல் வலுத்துள்ளது.