அஸ்ஸாமில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை... ஆனாலும், கொடூரமாகத் தாக்கப்பட்ட முதியவர்! #Shocking | Mob thrashes old Muslim man for selling beef

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (09/04/2019)

கடைசி தொடர்பு:13:55 (09/04/2019)

அஸ்ஸாமில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை... ஆனாலும், கொடூரமாகத் தாக்கப்பட்ட முதியவர்! #Shocking

ஸ்ஸாமில், மாட்டுக்கறி வைத்திருந்த முதியவரை அடித்து உதைத்துத் துன்புறுத்தி, பன்றிக்கறி சாப்பிடவைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

மாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவர் மீது தாக்குதல்

பிஸ்வாத் செரியலி என்ற சிறிய நகரத்தில், கடந்த ஏப்ரல் 7- ந் தேதி நடந்த இந்தச் சம்பவம் காணொளியாக இணையத்தில் பரவிவருகிறது. 

சகுத் அலி என்ற 68 வயது முதியவரை மண்தரையில் முழங்காலிடவைத்து,  சுற்றி இருந்தவர்கள் அவரை அடித்துத் துன்புறுத்தினர். பின்னர், பன்றிக்கறியைக் கொடுத்து அவரை சாப்பிடவைத்தனர். அதோடு, நீ இந்தியனா , பங்களாதேசியா அடையாள அட்டையைக் காட்டுமாறு கூறியும் தாக்கியுள்ளனர். 

போலீஸார் கூறுகையில், ''சகுத் அலி வாரச் சந்தையில் மாட்டுக்கறி விற்றுவந்துள்ளார். இதற்கான லைசென்சும் அவரிடத்தில் உள்ளது. 35 வருடங்களாக சகுத் அலி இங்கு மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார். சகுத் அலியைத் தாக்கிய கும்பல், சந்தையின் மேலாளர் கமல் தபாவையும் மிரட்டியுள்ளனர் '' என்று தெரிவித்தனர்.

சகுத் அலியின் உறவினர், கமல் தபா ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோழிக்குஞ்சை காப்பாற்றிய டெரிக்

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில்,  டெரிக் என்ற சிறுவன் தன் சைக்கிளில் அடிபட்ட கோழிக்குஞ்சை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். டெரிக்கின் புகைப்படம் உலகம் முழுக்க  வைரல் ஆனது. கேரளாவைச் சேர்ந்த ஓவியர் சுனில், பூக்கோடு டெரிக்கை ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியமும் வைரலாகிவருகிறது.  மனிதநேயத்தை டெரிக்கிடம் கற்க வேண்டுமென்றும் சுனில் பூக்கோடு தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், டெரிக்கின் பக்கத்து மாநிலமான அஸ்ஸாமில், மாட்டிறைச்சிக்காக முதியவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளது.   அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை. 15 வயதான மாடுகளை இறைச்சிக்காக வெட்டலாம்; முறையான அனுமதி இருந்தால் போதுமானது. அப்படியிருந்த நிலையிலும் முதியவரை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. தற்போது, சகுத் அலி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க