``பா.ஜ.க தேர்தல் அறிக்கை தனி ஒருவரின் குரல் மட்டுமே!" - ராகுல் காந்தி விமர்சனம் | The BJP Manifesto was created in a closed room. The voice of an isolated man say rahul

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (09/04/2019)

கடைசி தொடர்பு:14:45 (09/04/2019)

``பா.ஜ.க தேர்தல் அறிக்கை தனி ஒருவரின் குரல் மட்டுமே!" - ராகுல் காந்தி விமர்சனம்

 

ராகுல் காந்தி

"தனி மனிதரால் தயாரிக்கப்பட்ட தேர்தல்அறிக்கை, பா.ஜ.க-வின் அறிக்கை என்று" அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பா.ஜ.க தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று ( 8.4.2019 ) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொது சிவில் சட்டம் மற்றும் ராமர் கோயில் கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு உதவித் தொகை திட்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன.இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சனம்செய்துவருகின்றனர். அதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ராகுல் காந்தி ட்விட்ட்ரில் பதிவு

அதில், 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுமையான ஆலோசனைகள் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லட்சக் கணக்கான மக்களின் குரலுடன் வலிமையான அறிக்கையாக உருவாகியுள்ளது. ஆனால், பா.ஜ.க  தேர்தல் அறிக்கை, மூடப்பட்ட அறையில் தனி மனிதரால் குறுகிய பார்வையுடன் திமிர்த்தனத்துடன்  பா.ஜ.க  தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று ராகுல் காந்தி "விமர்சித்துள்ளார்.