``பால்கோட் ஏர்ஸ்ட்ரைக் நடத்தியவர்களுக்கு வாக்குகளை அர்ப்பணியுங்கள்!''- மோடி வேண்டுகோள் | vote to those who carried out air strike - modi

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (09/04/2019)

``பால்கோட் ஏர்ஸ்ட்ரைக் நடத்தியவர்களுக்கு வாக்குகளை அர்ப்பணியுங்கள்!''- மோடி வேண்டுகோள்

பால்கோட்டில் ஏர்ஸ்ட்ரைக் நடத்தியவர்களுக்கு உங்கள் வாக்குகளை அர்ப்பணிக்க வேண்டுமென்று பிரதமர் மோடி மகராஸ்டிராவில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார்.

மோடி

 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 90 கோடி மக்கள் வாக்களிக்கின்றனர். இதில், 25 கோடி பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள். பாரதிய ஜனதா கட்சி முதல்தலைமுறை வாக்காளர்களைக் குறி வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மகாராஸ்டிர மாநிலம் லாத்தூரில் இன்று நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``காங்கிரஸ் கட்சியால்தான் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது. சுதந்திரத்துக்கு முன், பிரிவினைவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி புத்திசாலித்தனமாக நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ள உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு - காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டுமென்று கேட்கிறது. 

புதிய இந்தியாவில் தீவிரவாதம் இருக்காது. தீவிரவாதிகள் அவர்களிடத்திலேயே அழிக்கப்படுவார்கள். பால்கோட்டில் ஏர்ஸ்ட்ரைக் நடத்தியவர்களுக்கு புதிய தலைமுறை வாக்காளர்கள் வாக்குகளை அர்ப்பணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் கூட பாகிஸ்தான் நலனையே பிரதிபலிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதுதான் இந்த அரசின் சாதனையாக கருதுகிறேன்''  என்று பேசினார்

பாலகோட் தாக்குதல்

புல்மாவா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பால்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய போர் விமானங்கள் வெடிகுண்டுகள் வீசின. தேர்தல் ஆதாயத்துக்காக இந்தத் தாக்குதலை பாரதிய ஜனதா அரசு நடத்தியதாகப் பரவலாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியே 'பால்கோட் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உங்கள் வாக்குகளை அர்ப்பணியுங்கள்' என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க