மார்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்த கார் விற்பனை! - டாப் 10 கார்கள் இதோ... | car sales increased in India

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:41 (09/04/2019)

மார்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்த கார் விற்பனை! - டாப் 10 கார்கள் இதோ...

ந்தியாவில் கடந்த 5 மாதங்களைக் காட்டிலும் மார்ச் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 2,68,843 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், மார்ச் மாதத்தில் 2,87,166 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 18,323 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன.

கார்கள்

இந்தியாவில் மார்ச் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில், பிப்ரவரி மாதத்தைவிட 4,020 கார்கள் அதிகம் விற்பனையாகி மாருதியின் டிசையர் மாடல் முதலிடத்தில் உள்ளது. பெலினோ மாடல் 17,264 கார்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல், பிப்ரவரியில் முதலிடத்திலிருந்த ஆல்ட்டோ மாடலில் 7,925 கார்கள் குறைவாக விற்பனையாகியதால், தற்போது 16,826 கார்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வேகன்-ஆர் மாடலில் 16,152 கார்கள் விற்பனையாகி நான்காவது இடத்திலும், பிப்ரவரியில் இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்விஃப்ட் மார்ச் மாதத்தில் 4,006 கார்கள் குறைவாக விற்பனையாகி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா 14,181 கார்களுடன் ஆறாவது இடத்திலும், ஹூண்டாயின் எலீட் i20 மாடல் 12,172 கார்களுடன் ஏழாவது இடத்திலும் உள்ளது. செலெரியோ (11,807 கார்கள்) எட்டாவது இடத்திலும், ஒன்பதாவது இடத்தில் க்ரெட்டா (11,448 கார்கள்) மாடலும் உள்ளது. பத்தாவது இடத்தில் இருக்கும் ஈக்கோ (9,893 கார்கள்) மாடலில் பிப்ரவரி மாதத்தைவிட 2,230 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. பிப்ரவரியில் 10-வது இடத்தில் இருந்த டாட்டாவின் டியாகோ மாடல் மார்ச் மாதத்தில் 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

tiago vs celerio

செலெரியோ மாடலில் பிப்ரவரியில் 3,631 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், மார்ச் மாதத்தில் 11,807 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 225.17 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. டாப் 10 கார்களின் பட்டியலில் எட்டு இடங்களை மாருதியும், இரண்டு இடங்களை ஹூண்டாயும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மார்ச் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!

மாடல் யூனிட்
மாருதி டிசையர் 19,935
மாருதி பெலினோ 17,264
மாருதி ஆல்ட்டோ 16,826
மாருதி வேகன்-ஆர்     16,152
மாருதி ஸ்விஃப்ட் 14,218
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 14,181
ஹூண்டாய்  எலீட் i20   12,172
மாருதி செலெரியோ 11,807
ஹூண்டாய் க்ரெட்டா   11,448
மாருதி ஈக்கோ   9,893

நீங்க எப்படி பீல் பண்றீங்க