`மோடியின் செயலைப் பார்த்திருந்தால் ஹிட்லரே தற்கொலை செய்திருப்பார்!' - மம்தா | Mamata Banerjee Attacks PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (09/04/2019)

`மோடியின் செயலைப் பார்த்திருந்தால் ஹிட்லரே தற்கொலை செய்திருப்பார்!' - மம்தா

மம்தா பானர்ஜி -  நரேந்திர மோடி

``இந்நேரம் அடால்ஃப் ஹிட்லர் இருந்திருந்தால் மோடியின் நடவடிக்கையைக் கண்டு தற்கொலை செய்துகொண்டிருப்பார்" என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல், வரும் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அங்கு தேர்தல் பிரசார பேரணியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசியவர், ``நாட்டில் நடந்த கலவரத்தின் மூலம் அரசியல் ஞானத்தைப் பெற்றுள்ளார் மோடி. அதற்குச் சான்றாக குஜராத் கலவரம்.. அதை மக்கள் இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவருக்கு எதிராக செயல்படக் கூடியவர்களை அதிகாரத்தின் மூலம் தாக்குதல் நடத்துகிறார். குறிப்பாகப் பாசிசத்தின் அரசனாகத் திகழ்கிறார் மோடி. அவருடைய இந்த நடவடிக்கையை அடால்ஃப் ஹிட்லர் உயிரோடு இருந்து, பார்த்திருந்தால் கூட தற்கொலை செய்துகொண்டிருப்பார் ".என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.