சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்! - பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 5 பேர் உயிரிழப்பு | BJP Legislator From Dantewada, Among 5 Killed By Maoists

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/04/2019)

கடைசி தொடர்பு:20:45 (09/04/2019)

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்! - பா.ஜ.க எம்.எல்.ஏ உட்பட 5 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பீமா மண்டவி கான்வாய் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் பீமா மண்டவி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டிவாடா பகுதியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பீமா மண்டவி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஷியாமாகிரி மலைப்பகுதியில் எம்.எல்.ஏ. பீமா மண்டவியின் வாகனம் குவக்குண்டா பகுதியை நோக்கிச்சென்றுகொண்டிருந்தபோது, மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் வாகனத்திலிருந்து யாரும் தப்பிச்செல்லாத வகையில் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியுள்ளனர்.

உயிரிழப்பு

இந்தத் தாக்குதலில் எம்.எல்.ஏ பீமா மண்டவி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பாதுகாப்பு படையினர் பாதிக்கப்பட்ட சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.  எம்.எல்.ஏ. பீமா மண்டவிக்கு வயது 40. இவர் 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் தாண்டேவாடா ரிசர்வ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்தி கர்மாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஏப்ரல் 11ம் தேதி தாண்டேவாடாவில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் நிலையில் இந்தத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.