`7 மாத சம்பள பாக்கியைக் கேட்டால் ஏதாவது காரணம் சொல்வார்!'- முதலாளியைக் கடத்தி டார்ச்சர் செய்த ஊழியர்கள்! | Not Paying salaries Employees Allegedly Kidnapped Their Boss

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (10/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (10/04/2019)

`7 மாத சம்பள பாக்கியைக் கேட்டால் ஏதாவது காரணம் சொல்வார்!'- முதலாளியைக் கடத்தி டார்ச்சர் செய்த ஊழியர்கள்!

சம்பளம் தராததால், ஊழியர்களே முதலாளியைக் கடத்திய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

முதலாளியை கடத்திய ஊழியர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுஜெய் (வயது 23) ஹாலாசூரு பகுதியில் நிறுவனம் நடத்திவருகிறார். நிதிநெருக்கடி காரணமாகத் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். ஊதியம் கேட்டு வரும் ஊழியர்களிடம், ஏதாவது காரணம் சொல்லி நாளைக் கடத்திவந்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரத்தில் இருந்த ஊழியர்கள் அவரைக் கடத்துவது என முடிவுசெய்தனர். கடந்த மார்ச் 21-ம் தேதி, 7 ஊழியர்கள் திட்டமிட்டபடி சுஜெய்யைக் கடத்தியுள்ளனர். அவரைத் தங்கள் நண்பனின் இடத்தில் அடைத்துவைத்து டார்ச்சர் செய்துள்ளனர். ஊதியத்தை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.  சுஜெய் ஊதியம் தர ஒப்புக்கொண்டதையடுத்து அவரை விடுவித்துள்ளனர்.

அங்கிருந்து வந்த சுஜெய், ஹாலாசூரு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரை ஏற்ற காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள  3 பேரைத் தேடிவருகின்றனர்.