`கோபிநாத் என்பவரின் மனைவியின் வயது 24!- சிக்கிக்கொண்ட சுயேச்சை வேட்பாளர் பொன்னுத்தாயி | Arapor iyakkam to file complaint against tenkasi EC officials to CEC

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (10/04/2019)

கடைசி தொடர்பு:16:25 (10/04/2019)

`கோபிநாத் என்பவரின் மனைவியின் வயது 24!- சிக்கிக்கொண்ட சுயேச்சை வேட்பாளர் பொன்னுத்தாயி

தேர்தல்  வயது  தெரியாத சுயேச்சை வேட்பாளர்

 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 25 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தில் சொல்லப்பட்ட விதி. அப்படி இருக்கும்போது தென்காசி (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பொன்னுத்தாயி என்பவர் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் 24 வயது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . இதைக்கூட கவனிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அப்படியே மனுவை ஏற்றுக்கொண்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்துப் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன், ``விருநுகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுத்தாயி. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் ஜெயராமன் வெங்கடேசன் தெரிவித்து தென்காசி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வேட்பு மனுவில்  24 வயது என்று குறிப்பிட்டுள்ளார். இதைக்கூட கவனிக்காமல் தேர்தல் அதிகாரிகள் மனுவை  ஏற்றிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை எத்தகையது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்கூட தெரியாமல், தேர்தல் அதிகாரிகள்  செயல்படுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவின்போது எப்படிச் செயல்படுவார்கள்  என்பதையும் யோசிக்க வைக்கிறது. இது குறித்து  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார்  தெரிவிக்க  உள்ளோம்" என்றார் 

இதுகுறித்து  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியைத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது  அவர் நமது அழைப்பை  ஏற்கவில்லை.