தடை மோடி பயோபிக்குக்கு மட்டுமல்ல நமோ டிவி, மோடி வெப் சீரியஸுக்கும்தான்! - வெளியாகும் புதிய தகவல் | Modi Biopic Ban Order Also Applies to NaMo TV and web series on modi, says Sources

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (10/04/2019)

கடைசி தொடர்பு:18:57 (10/04/2019)

தடை மோடி பயோபிக்குக்கு மட்டுமல்ல நமோ டிவி, மோடி வெப் சீரியஸுக்கும்தான்! - வெளியாகும் புதிய தகவல்

மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் `பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. 

மோடி பயோபிக்

பிரதமர் மோடியின் பயோபிக்காகத் தயாராகி இருக்கும் `பி.எம். நரேந்திர மோடி' படத்தில் விவேக் ஓபராய், அவரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நாளான ஏப்ரல் 11-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை ஒட்டியே படம் ரிலீஸாகிறது எனவும் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு `யு' சான்றிதழையும் வழங்கியிருந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. 

தேர்தல் ஆணையத்தின் கடிதம்

இந்த நிலையில், மறு உத்தரவு வெளிவரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என பி.எம்.நரேந்திர மோடி படத் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தேர்தல் ஆணையம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியின் பிரசாரங்கள் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்களின் பிரசாரங்களை ஒளிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்ட 24 மணி நேர டி.வி. சேனல் நமோ டி.வி தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், எராஸ் டிவியின் யூடியூப் சேனலில் 5 பாகங்களாக ஒளிபரப்பாக இருக்கும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த மோடி: ஜர்னி ஆஃப் எ காமன் மேன்'  வெப் சீரியஸுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரத்தில். 

தேர்தல் ஆணையம்


பி.எம்.மோடி படத் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தேர்தல் ஆணையம் எழுதியிருக்கும் கடிதத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்தக் கடிதத்தில். `தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அரசியல்  கள நிலவரத்தைப் பாதிக்கும் வகையில், ஒரு தனிநபர் அல்லது ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் வீடியோக்களை மீடியாவில் ஒளிபரப்பக் கூடாது' என அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார்கள்.