ராஜஸ்தான் தேர்தலில் அதிரடி - பி.ஜே.பி-யில் இணைந்தார் குஜ்ஜார் இனத் தலைவர்! | gujjar leader join in bjp

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (10/04/2019)

கடைசி தொடர்பு:20:10 (10/04/2019)

ராஜஸ்தான் தேர்தலில் அதிரடி - பி.ஜே.பி-யில் இணைந்தார் குஜ்ஜார் இனத் தலைவர்!

ந்தியா முழுமைக்கும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் அரசியலில் பங்கேற்காத பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆதரவுகளை அரசியல் கட்சிகளுக்கு அளித்து வருகின்றன. நாளை தொடங்க உள்ள மக்களவைத் தேர்தலின் அரையிறுதி தேர்தலாக கருதப்பட்ட ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தானில் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

கிரோரி சிங்

ராஜஸ்தானில் தங்களின் அரசியல் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், குஜ்ஜார் இன அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா, பி.ஜே.பியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வின்போது கிரோரி சிங் மகன் விஜய் பைன்ஸ்லாவும் உடன் இருந்தார்.

குஜ்ஜார் இன மக்கள் போராட்டம்

சமீபத்தில் குஜ்ஜார் உயர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டி தொடர் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை ராஜஸ்தானில் மேற்கொண்டார். இந்தப் போராட்டங்கள் வடஇந்திய அரசியலில் முக்கிய கவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு குஜ்ஜார் இன மக்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. இதற்கிடையே, கிரோரி சிங்  பி.ஜே.பி-யில் இணைந்தது, ராஜஸ்தான் தேர்தல் களத்தில் பி.ஜே.பியின் செல்வாக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.