`எனது வாழ்நாளில் இது மோசமான நாள்!'- வாக்களிக்கமுடியாமல் திரும்பிய பிரதாப் ரெட்டியின் மகள் ஆவேசம் | I feel cheated as a citizen. Does my vote not count - Shobana Kamineni

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (11/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (11/04/2019)

`எனது வாழ்நாளில் இது மோசமான நாள்!'- வாக்களிக்கமுடியாமல் திரும்பிய பிரதாப் ரெட்டியின் மகள் ஆவேசம்

`இந்தியக் குடிமகளாக இது மோசமான நாள்' என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா கூறியுள்ளார்.

ஷோபனா


நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும்  25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். சீரஞ்சீவி, ராம்சரண், அமலா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மகள் ஷோபனா வாக்களிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த வாக்காளர்கள் பட்டியலில் ஷோபனாவின் பெயர் இல்லாததால் கடும் அதிருப்திக்குள்ளானார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள காணொலியில் அவர் பேசியதாவது,  ``எனது வாழ்நாளில் இந்தியக் குடிமகளாக இது மோசமான நாளாகும். எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக நான் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளேன். நான் இந்தியக் குடிமகள். எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.  எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியம் இல்லையா. இந்தியக் குடிமகளான எனக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது. இதற்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் எனது வாக்கைப் பதிவு செய்திருந்தேன்'' எனப் பேசியுள்ளார்.