அல்பேஷ் தாகூர் விலகல்! - குஜராத்தில் பலமிழக்கும் காங்கிரஸ் | alpesh thakor resign from congress

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (11/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (11/04/2019)

அல்பேஷ் தாகூர் விலகல்! - குஜராத்தில் பலமிழக்கும் காங்கிரஸ்

ந்திய மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு, 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடைசி நேரத்தில் முக்கியத் தலைவர்கள் கட்சித் தாவல்களும், கட்சியிலிருந்து விலகுவதும்கூட அந்தந்த மாநிலங்களின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன.  சமீபத்தில், குஜ்ஜார் இன மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டி போராட்டங்களை மேற்கொண்டனர். இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கிரோரி சிங், சமீபத்தில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார்.

காங்கிரஸில் இருந்து விலகிய அல்பேஷ் தாகூர்

கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பி.ஜே.பி-க்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகூர், ஹர்திக் பட்டேல் ஆகிய மூவரையும் வலுவான ஆயுதமாகக் காங்கிரஸ் பயன்படுத்தியது. பட்டேல் சமூக மக்களின் இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்களை மேற்கொண்டுவந்த ஹர்த்திக் பட்டேல், சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஜிக்னேஷ் மேவானியும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  பி.ஜே.பி-க்கு எதிராக வலுவான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றார்.

ரல்பேஷ் தாகூர்

இந்நிலையில், குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவராக உருவெடுத்தவரும், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினருமான அல்பேஷ் தாகூர், இரண்டு ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன்  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  அதே நிலையில், பி.ஜே.பி-யிலும் இணையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அல்பேஷ் தாகூர் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளது மக்களவைத் தேர்தலில்  வடக்கு குஜராத்தில் உள்ள தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.