தவறாக நடக்க முயன்றவருக்கு குஷ்பு விட்ட பளார்! | khushsundar slapped a man who tried to misbehave with her while campaigning

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (11/04/2019)

கடைசி தொடர்பு:15:36 (11/04/2019)

தவறாக நடக்க முயன்றவருக்கு குஷ்பு விட்ட பளார்!

குஷ்பூ
 

ர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிரசாரத்தில் இருந்த குஷ்புவை அங்கிருந்த ஒருவர் தவறான முறையில் தொட்டுள்ளார். இதையறிந்த குஷ்பு அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. அங்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும்  தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

குஷ்பூ பற்றிய ட்விட்

இந்த நிலையில் மத்திய பெங்களூரு வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. அப்போது அவருக்குப் பின்னால் இருந்து ஒரு நபர் அவரைத் தவறான முறையில் தொடுவதற்கு முயன்றுள்ளார். இதையறிந்த குஷ்பு அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியில்  உறைந்திருக்க போலீஸார் அந்த நபரை பிடித்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.