உயரம் 63 செ.மீ, வயது 25... ஜோதி ஆம்கேவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? | World's smallest woman votes today in nagpur

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:05 (11/04/2019)

உயரம் 63 செ.மீ, வயது 25... ஜோதி ஆம்கேவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

லகிலேயே குள்ளமான பெண் என்ற பெயரை எடுத்தவர் ஜோதி ஆம்கே. இவரின் உயரம் வெறும் 63 செ.மீட்டர்தான். நாக்பூரில் வசித்து வருகிறார். கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர். பல்துறை வித்தகரான ஜோதி ஆம்கே நாக்பூரில் இன்று தன் ஜனநாயகக் கடமையாற்ற கியூவில் நின்றார். இதைப் பார்த்த பலரும் அவரை வெகுவாக பாராட்டினர். வாக்குச்சாவடியில்  அவர் ஓட்டளிக்கத் தேர்தல் அலுவலர்கள் உதவி புரிந்தனர். 

ஜோதி ஆம்கே

வாக்களித்த பிறகு ஊடகங்களிடம் பேசிய ஜோதி ஆம்கே, ``தேர்தல் தினத்தன்று முதலில் அனைவரும் சென்று வாக்களித்துவிட்டு மறு வேலை பாருங்கள்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார். கடந்த 2011-ம் ஆண்டு உலகின் மிகச் சிறிய பெண் என்று இவர் அறிவிக்கப்பட்டார். தற்போது, ஜோதி ஆம்கேவுக்கு 25 வயதாகிறது. இந்தி  பிக்பாஸ் தொடரிலும் நடித்துள்ளார். அமெரிக்க மற்றும் இத்தாலி நாட்டு சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார்.  இவர், சிறந்த சமையல் கலைஞரும் கூட. புனே அருகேயுள்ள லோனாவாலாவில் உள்ள மியூசியத்தில் இவருக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

ஆம்கே

ஓட்டளிப்பதை ஊக்கப்படுத்த விளம்பரங்களில் நடிப்பதற்காக சூப்பர் நட்சத்திரங்களைத் தேர்தல் ஆணையம் அணுகுகிறது. அதற்குப் பதிலாக ஜோதி ஆம்கே போன்றவர்களை வைத்து வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தினால் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் வெற்றியடைய வாய்ப்பு உண்டே. 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க