``பட்டதாரி இல்லை!''- உண்மையைச் சொன்னது ஸ்மிரிதியின் வேட்பு மனு | In affidavit, Smriti Irani says i am not graduate

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:11:40 (12/04/2019)

``பட்டதாரி இல்லை!''- உண்மையைச் சொன்னது ஸ்மிரிதியின் வேட்பு மனு

த்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

ஸ்மிரிதி இரானி

வேட்புமனுவில், தான் பட்டதாரி இல்லை என்று முதன்முறையாக அவர் தெரிவித்துள்ளார். 1994-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிக்க சேர்ந்ததாகவும் ஆனால், பட்டம் பெறவில்லை என்றும் தன் வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பாஸ் செய்துள்ளதாகவும் ஸ்மிரிதியின் வேட்பு மனு கூறுகிறது.  கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் பட்டம் பெறவில்லை என்று குற்றம்சாட்டின. அப்போதும், ஸ்மிரிதி இரானி தான் பட்டதாரிதான் என்று அடித்துக் கூறி வந்தார். இந்நிலையில், இந்த தேர்தலில் மாற்றித் தெரிவித்துள்ளார். 

ஸ்மிரிதி இரானிக்கு ரூ.4.71 கோடிக்கு சொத்து உள்ளது. அதில், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2.96 கோடி ஆகும். அசையும் சொத்துகள்  ரூ.1.75 கோடிக்கு உள்ளன. ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. ஸ்மிரிதி மீது எப்.ஐ.ஆர் எதுவும் இல்லை. லோன் எதுவும் பெறவில்லை. இவரின், கணவர் சூபின் பெயரில் அசையா சொத்துகள் ரூ 2.97 கோடிக்கும் அசையும் சொத்துகள் ரூ.1.69 கோடிக்கும் உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க