நிதி வழங்குவதில் மட்டுமல்ல வரி செலுத்துவதிலும் அமிதாப் ''கிங்'தான்! | Amitabh Bachchan becomes on of the highest tax payers in country

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (13/04/2019)

கடைசி தொடர்பு:10:30 (13/04/2019)

நிதி வழங்குவதில் மட்டுமல்ல வரி செலுத்துவதிலும் அமிதாப் ''கிங்'தான்!

டிகர் அமிதாப்பச்சன், பல்வேறு நாட்டு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.அண்மையில், உத்தரபிரதேசம் மற்றும் மகராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ரூ.5 கோடி கடனை அடைத்தார். புல்மாவா தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். பீகார் மாநிலத்தில் முஷார்பர் பகுதியைச் சேர்ந்த 2,084 விவசாயிகளின் கடனை அடைத்தார். தொடர்ந்து,  நிதியுதவிகளை அமிதாப்பச்சன் செய்து வந்தாலும், அதை வைத்து எந்த வரி ஆதாயத்தையும்  அடைய விரும்புவதில்லை. கடந்த நிதியாண்டில் மட்டும் (2018-19) அமிதாப்பச்சன் ரூ.70 கோடி வரி கட்டி சாதனைப் படைத்துள்ளார். 

பாலிவுட் சூப்பர் ஹீரோ

வயதானாலும் இப்போதும் பாலிவுட்டிள் சூப்பர் ஹீரோ அமிதாப்தான். நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக 'பட்லா ' என்ற ;த்ரில்லர் படத்தில் அமிதாப்பச்சன் அசத்தி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

தற்போது, ரூ. 70 கோடி வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ள அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து கடனாளியாக மாறியவர்தான். கடந்த 1995-ம் ஆண்டு ஏ.பி.சி (அமிதாப்பச்சன் கார்ப்பரேஷன்) என்ற பெயரில் சினிமா நிறுவனத்தைத் தொடங்கி 'உல்லாசம்' தமிழ்ப் படம் உள்ளிட்ட பல படங்களை எடுத்தார். ஆனால், படங்கள்  தோல்வியைத் தழுவ,கடனாளி ஆனார். பின்னர், ஸ்டார் டி.வி.யின் 'குரோர்பதி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி கடனில் இருந்து மீண்டார்.  இப்போது,  நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து மீண்டும் அமிதாப் முத்திரை பதிக்கத் தொடங்கினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க