`எனக்கு ஓட்டுப் போடாதவங்களுக்கு சாபம் விட்டுருவேன்!' - பா.ஜ.க-வின் சாக்ஷி மகராஜ் | sakshi maharaj of BJP curses Uttarpradesh voters

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (13/04/2019)

கடைசி தொடர்பு:15:30 (13/04/2019)

`எனக்கு ஓட்டுப் போடாதவங்களுக்கு சாபம் விட்டுருவேன்!' - பா.ஜ.க-வின் சாக்ஷி மகராஜ்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் பாரதிய ஜனதா கட்சியின் சாக்ஷி மகராஜ். அந்தப் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அவர் பிரசாரத்தின்போது மக்களைப் பார்த்து சாபம் விட்டுவிடுவேன் என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல்

பிரசாரத்தின்போது மக்களிடையே பேசிய அவர், ``இங்கே பாருங்கள், நான் ஒரு துறவி. நீங்கள் எனக்கு ஒட்டுப் போட்டு வெற்றிபெற வைப்பீர்கள் என்றே நம்புகிறேன். வெற்றி பெறவில்லை என்றால் கோயில்களில் பூஜை செய்யப் போய்விடுவேன். ஆனால், நான் துறவி என்பது நினைவில் இருக்கட்டும். நீங்கள் எனக்கு ஒட்டுப் போடவில்லை என்றால் நான் உங்களுக்குச் சாபம் விட்டுவிடுவேன். அதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது" என்று மக்களை அச்சப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். மூட நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களின் அச்சத்தை தனக்குச் சாதகமாக ஒரு வேட்பாளர் பயன்படுத்திக்கொள்வது ஜனநாயகத்தையும் தேர்தல் விதிமுறைகளையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், பாரதிய ஜனதா கட்சி தரப்பு இதுகுறித்து எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க