மோடி சொன்னதும் நடந்ததும்: `செளபாக்கிய யோஜனா', `தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா'-வில் நடந்தது என்ன..? பகுதி - 7 | Modi's promises and realities - part 7

வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (13/04/2019)

கடைசி தொடர்பு:19:04 (13/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: `செளபாக்கிய யோஜனா', `தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா'-வில் நடந்தது என்ன..? பகுதி - 7

அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் அடிப்படை மின் கட்டமைப்புகளை உருவாக்கி, மின் சேவையை வழங்குவதற்காக 'ராஜீவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா' (RGGVY) எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் 2005-2014-ம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 1,08,642 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

மோடி சொன்னதும் நடந்ததும்: `செளபாக்கிய யோஜனா', `தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா'-வில் நடந்தது என்ன..? பகுதி - 7

த்திய பி.ஜே.பி. அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி இந்தத் தொடரில் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இப்பகுதியில் மின்சாரத் துறையில் 'செளபாக்கிய யோஜனா' மற்றும் 'தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா'-வில் மத்திய அரசு செய்தவை என்னென்ன என்பதைக் காண்போம்.

மோடி சொன்னதும் நடந்ததும்

சௌபாக்கிய யோஜனா:

இந்தியா முழுவதும் மின் இணைப்பு இல்லாத நான்கு கோடி குடும்பங்களுக்குக் கடந்த 2018-ம் ஆண்டிற்குள் மின்வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகப் பிரதமர் மோடி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைத்த திட்டம்தான் 'சௌபாக்கிய யோஜனா'. 

தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா: 

இந்தியாவில் இன்றளவும் மின்வசதி இல்லாத பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு 2018-ம் ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு, கடந்த 2015-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இரு திட்டங்களிலும் நடந்தது என்ன?

செளபாக்கிய யோஜனா மற்றும் தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா வில் நடந்தது என்ன

காங்கிரஸ் தலைமையில் ஏற்கெனவே இருந்த ஆட்சியின்போது, இந்தியாவில் மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் அடிப்படை மின் கட்டமைப்புகளை உருவாக்கி, மின் சேவையை வழங்குவதற்காக 'ராஜீவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா' (RGGVY) எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் 2005-2014-ம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 1,08,642 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் 2014-2019-ம் ஆண்டு வரையிலான இப்போதைய பி.ஜே.பி. ஆட்சியின்போது மின் இணைப்பானது, ஏறக்குறைய 18,000 கிராமங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர், உத்தரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடங்கிய சில கிராமங்களுக்கு இன்றளவும் மின்வசதி செய்து கொடுக்கப்படவில்லை. எனினும், இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும் மின் வசதியை பி.ஜே.பி. அரசு வழங்கியிருப்பதாகப் பிரதமர் மோடி, தொடர்ந்து தன் உரையில் குறிப்பிட்டு வருகிறார். உண்மைநிலை என்னவோ வேறாக இருக்கிறது. அந்த்யோதயா மிஷன் இணையதள தகவலின்படி, இந்தியா முழுவதும் இன்றளவும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வசதி இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வசதி இல்லை என்று தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களுக்கு மின்வசதி செய்துகொடுக்கக்கூடிய இத்தகைய திட்டங்களைத் தொடங்கியதுடன், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் உள்ள 92 விழுக்காடு கிராமங்களுக்கு மின்வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதன் தொடர்ச்சியாக பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் மின்சாரம் அளிக்கும் திட்டத்தை ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. 

என்றாலும், 100 விழுக்காடு கிராமங்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.

- தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்