``தலையில் 6 தையல்கள்” - துலாபாரத்தின் போது சசி தரூருக்கு நேர்ந்த சோகம்! | Shashi Tharoor Injured While Offering Prayers at temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (15/04/2019)

கடைசி தொடர்பு:15:00 (15/04/2019)

``தலையில் 6 தையல்கள்” - துலாபாரத்தின் போது சசி தரூருக்கு நேர்ந்த சோகம்!

கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நடந்த மத வழிப்பாட்டின் போது சசி தரூர் துலாபாரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயத்துடன் சசி தரூர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சசி தரூர். இவர் சில தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் தன் பிரசாரத்தை தொடங்கினார். 

இந்து கோயில்களில் எடைக்கு நிகரான பொருள்கள் கடவுளுக்கு வழங்கப்படுவது ஒரு வழக்கம். அதன் படி இன்று தாம்பனூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சசி தரூர் தன் எடைக்கு நிகரான சர்க்கரை வழங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் துலாபாரத்தில் அமர்ந்திருக்கும் போது எதிர்பாராதவிதமாக தராசு கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் சசி தரூருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது.

சசி தரூர்

பிறகு உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள வேறு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சசி தரூருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சசி தரூர் தன் பிரசாரத்தைத் தொடங்கும் போது இதே போல் கேரளாவில் உள்ள மற்றொரு கோயிலுக்குச் சென்று அங்கு தன் எடைக்கு நிகரான வாழைப்பழங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.