`7 மாநிலங்களில் 6 லட்சம் மரங்கள்' - `குளோரி ஆப் இந்தியா' விருது பெறும் ஆர்.கே.நாயர் | tree man rk nayar from kerala get glory of india

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (16/04/2019)

கடைசி தொடர்பு:14:10 (16/04/2019)

`7 மாநிலங்களில் 6 லட்சம் மரங்கள்' - `குளோரி ஆப் இந்தியா' விருது பெறும் ஆர்.கே.நாயர்

நேபாளத்தில் மரங்கள் வளர்ப்புக்காக `குளோரி ஆப் இந்தியா' விருதைப் பெற இருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஆர்.கே.நாயர்.

12-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த நாயர் வேலை தேடி மும்பைக்குச் சென்றார். அங்கு ஒரு மருந்தகத்தில் விற்பனையாளராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். பிறகு துணிக்கடை ஒன்றில் மேற்பார்வையாளராகச் சேர்ந்து மேலாளராகப் பதவி உயர்வு பெற்றார். மும்பையிலிருந்து குஜராத்துக்குச் சென்ற நாயருக்கு இயற்கையின் மீது நாட்டம் சென்றுவிட்டது. மேலும், சமூக சிந்தனை கொண்ட நாயர் அங்குள்ள பழங்குடியின குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தும் வந்தார். தன் சமூக சேவைகளுக்கு வேலை ஒரு தடையாக இருந்ததால், வேலையை உதறிவிட்டு முழு நேரமும் சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்.

மரங்கள்

6 வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் சாலை அமைக்கும் திட்டத்துக்காக 170 மரங்கள் வெட்டப்பட்டது. அதைப் பார்த்து வருத்தமடைந்த நாயர், ஜப்பானில் பயன்படுத்தும் மியாவாக்கி முறையில் உடனடியாக 1,500 மரங்களை நட்டுள்ளார். இதைத் தொடர்ந்து  மகாராஷ்டிராவில் ரசாயனக் கழிவுகள் நிறைந்த பகுதியை சுத்தம் செய்து 38 வகையான 32,000 மரங்களை நட்டு அசத்தியுள்ளார். தற்போது புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக 40,000 மரக் கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம், வங்கதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் 6 லட்சம் மரங்களை நட்டு பல காடுகளை உருவாகியுள்ளார். இதற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தன்னைப் போலவே பிறரும் இயற்கையை நேசித்து மரங்கள் வளர்க்க தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். இவருக்காக `குளோரி ஆப் இந்தியா' விருது காத்துக்கொண்டிருக்கிறது.