மோடி சொன்னதும் நடந்ததும்: பி.ஜே.பி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்கள் எத்தனை? பகுதி 9 | How many new IIT opened by BJP Government..? Part - 9

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (16/04/2019)

கடைசி தொடர்பு:20:53 (16/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: பி.ஜே.பி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்கள் எத்தனை? பகுதி 9

மோடி சொன்னதும் நடந்ததும்: பி.ஜே.பி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்கள் எத்தனை? பகுதி 9

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில் தற்போதைய மோடியின் தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகமான (ஐ.ஐ.டி)-க்களின் எண்ணிக்கை, அவற்றின் இப்போதைய நிலை பற்றிக் காண்போம்.

மோடி சொன்னதும் நடந்ததும்

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) :

இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகத் திறமைமிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கத்துடன், மிகச்சிறந்த அறிவியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்ட உயர்கல்வி நிறுவனம்தான், இந்தியத் தொழில்நுட்பக் கழகம்.

நாட்டின் முதல் ஐ.ஐ.டி தொடங்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்தவர், பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், 1950-ம் ஆண்டில் கரக்பூரில் நாட்டின் முதல் ஐ.ஐ.டி தொடங்கப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து தற்போது 23 ஐ.ஐ.டி-க்களாக அதிகரித்துள்ளது.

பி.ஜே.பி ஆட்சியில் எத்தனை ஐ.ஐ.டி-க்கள் கட்டப்பட்டன?

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. களின் எண்ணிக்கை - பி.ஜே.பி.

மத்திய பி.ஜே.பி ஆட்சியின்போது, கடந்த ஐந்தாண்டுகளில் ஆறு ஐ.ஐ.டி-க்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 'இந்தியச் சுரங்கக் கல்வி மையம்' ஐ.ஐ.டி-யாக, கடந்த 2016-ல் தரம் உயர்த்தப்பட்டது. புதிய ஐ.ஐ.டி-களுக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 7,002 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அவை அனைத்தும் வரும் 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ஐ.ஐ.டி வளாகங்கள் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில், தற்காலிக வளாகங்களில் பத்தில் ஒரு பங்கு மாணவர்கள் என்ற எண்ணிக்கையுடன் இயங்கி வருகின்றன. 

அந்தவகையில், இந்தியாவில் தற்போதுள்ள ஐ.ஐ.டி-க்களின் எண்ணிக்கை 23. இவற்றில் ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் ஆட்சிகளின்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்கள் எண்ணிக்கை 15. அதிலும் கடந்த 2008 - 2009 ஆண்டில் மட்டும் 8 ஐ.ஐ.டி-க்கள் தொடங்கப்பட்டன. பி.ஜே.பி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்களின் எண்ணிக்கை 7. ஒரு ஐ.ஐ.டி தரம் உயர்த்தப்பட்ட உயர் கல்வி நிறுவனம்.

பி.ஜே.பி ஆட்சியைவிடவும் காங்கிரஸ் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி-க்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், ஒட்டுமொத்த காங்கிரஸ் ஆட்சியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஐ.ஐ.டி-க்கள் தொடங்கியதில் பி.ஜே.பி-யின் செயல்பாடு அதிகம் என்பதே உண்மை.

-  தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்