மஹத் - இந்திய அழகி பிராச்சிக்கு நிச்சயதார்த்தம்! - திருமண தேதி அறிவிக்கவில்லை | Actor Mahat Raghavendra engaged with his girl friend

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:14:46 (18/04/2019)

மஹத் - இந்திய அழகி பிராச்சிக்கு நிச்சயதார்த்தம்! - திருமண தேதி அறிவிக்கவில்லை

பிக்பாஸ் தமிழ் சீசன் 2-ல் கலந்துகொண்ட மஹத் ராகவேந்திராவுக்கு நேற்று அவருடைய காதலி பிராச்சியுடன் லக்னோவில் நிச்சயதார்த்தம் நடந்தது. `மங்காத்தா' படத்தில் அஜீத்துடன், `ஜில்லா'வில் விஜய் மற்றும் மோகன்லாலுடன் நடித்தவர், சிம்புவுடன் `காளை', `வல்லவன்', `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' ஆகிய படங்களிலும் நடித்தவர் மஹத். இதில் மங்காத்தா படத்தில் நடித்ததற்காகச் சிறந்த அறிமுக நடிகருக்கான `எடிசன் விருதை'யும் பெற்றார். குறிப்பிட்டுப் பெயர் சொல்லக்கூடிய படங்களில் நடித்திருந்தாலும் மஹத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட பிறகுதான்...  

பிக்பாஸ் மஹத் நிச்சயதார்த்தம்

மஹத்தும் அவர் காதலி பிராச்சி மிஸ்ராவும் துபாயில் நடந்த விழாவொன்றில்தான் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு பரஸ்பரம் காதலைச் சொல்லியிருக்கிறார்கள். பல வருடங்களாகக் காதலில் இருந்தவர்களுக்கு நேற்று (17.4.19) நிச்சயதார்த்தம் நடந்தது. 

பிராச்சி, 2012-ல் மிஸ் இண்டியா எர்த் டைட்டில் வின்னர். துபாயில் ஃபேஷன் அண்ட் ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியொன்றை நடத்தி வருகிறார்.  

மஹத் - பிராச்சி இருவரும் தங்களுடைய சமூகவலைதளத்தில் `என்கேஜ்டு' என்ற வார்த்தையுடன் தங்கள் நிச்சயதார்த்தப் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்கள். திருமணம் எப்போது என்கிற தகவலை மட்டும் இருவருமே தெரிவிக்கவில்லை.