மதமாற்றம் செய்ய வற்புறுத்திய அதிகாரி! - திகார் சிறையில் கைதிக்கு நேர்ந்த கொடுமை | In Dihar Jail Prison Forced to Convert As a Hindu by Jail Superintendent

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (20/04/2019)

மதமாற்றம் செய்ய வற்புறுத்திய அதிகாரி! - திகார் சிறையில் கைதிக்கு நேர்ந்த கொடுமை

ஜெயில் சூப்பிரண்டு சூடான உலோகத்தைக்கொண்டு கைதியின் முதுகில் 'ஓம்' என பச்சைக்குத்திய சம்பவம் டெல்லி திகார் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறை

2016-ம் ஆண்டு மகாராஷ்ட்ரா கன்ட்ரோல் ஆஃப் ஆர்கனைஸ்டு கிரைம் ஆக்ட் (Maharashtra Control of Organised Crime Act (MCOCA) and Arms Act,) படி கைது செய்யப்பட்டவர் நபீர். இவர் திகார் சிறையில் உள்ள ஹை ரிஸ்க் வார்டு பகுதியிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த புதன்கிழமை நபீரின் வழக்கறிஞர் ஜக்மோகன் சிங் கர்கர்டூமா கோர்ட்டில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்படி  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் ரிச்சா பாரிகர் முன் தனது டீ-சர்டடை கழற்றி தனது முதுகில் கீறப்பட்ட ஓம் குறியை காண்பித்தார் நபீர்.

மேலும் ஜெயில் சூப்பிரண்டு தனக்கு நவராத்திரியின்போது உணவுதர மறுத்ததாகவும், தன்னை மதம் மாற்ற முயற்சிசெய்வதாகவும் குறிப்பிட்டார். உலோகத்துண்டை நன்றாகச் சூடாக்கி அதைக் கொண்டு தனது முதுகுப் பகுதியில் கீறினார் என நபீர் தெரிவித்திருக்கிறார். இதையொட்டி , ஜெயிலிலுள்ள சிசிடிவி கேமராக்களின் புட்டேஜை கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார் ரிச்சா பாரிகர்.