``தமிழ்நாடு, கேரளாவில் பி.ஜே.பி ஒரு தொகுதியில் கூட வெல்லாது'' - மம்தா பானர்ஜி! | Mamta says that BJP wont win a single seat in TN, Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:15:00 (20/04/2019)

``தமிழ்நாடு, கேரளாவில் பி.ஜே.பி ஒரு தொகுதியில் கூட வெல்லாது'' - மம்தா பானர்ஜி!

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.                                                                    

     மம்தா


மேற்கு வங்க மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு 3ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் மம்தா பானர்ஜி. தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள பாலூர்காட் பாராளுமன்றத் தொகுதியில் மம்தா பேசுகையில், ``மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற மோடியின் எண்ணம் பகல் கனவாகவே நீடிக்கும். வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்.

                                               மம்தா

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு நூறு இடங்களுக்கு மேல் கிடைக்காது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பி.ஜே.பி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது'' என்றார். மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற இனிப்பான ரசகுல்லா உருண்டையாக பூஜ்யம் வடிவில் இருப்பதால், அதுதான் மோடிக்குக் கிடைக்கும் என்ற பொருள்படும்படி குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.