`இந்த இளம் அதிகாரிக்கு சல்யூட்!'' - திரிச்சூர் பெண் ஆட்சியருக்குக் குவியும் பாராட்டுகள் # ViralVideo | Young collector works along with officers in lifting the boxes

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (22/04/2019)

கடைசி தொடர்பு:11:45 (22/04/2019)

`இந்த இளம் அதிகாரிக்கு சல்யூட்!'' - திரிச்சூர் பெண் ஆட்சியருக்குக் குவியும் பாராட்டுகள் # ViralVideo

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ளது. 2 -ம் கட்டத் தேர்தல் முடிந்த பின்னர் தற்போது 3 -ம் கட்ட தேர்தலுக்காக நாடு தயாராகி வருகிறது. நாளை (ஏப்ரல் 23) கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் 3 -ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. 

வாக்குப்பதிவு

இந்தத் தேர்தலில் தலைவர்களின் பிரசாரம் மட்டுமல்லாது வேறு பல விஷயங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு ராகுல் காந்தியின் ட்ரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட பல உதாரணங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது பெண் கலெக்டர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல உதவும் வீடியோ ஒன்று  இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது. 

அவர் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தின் ஆட்சியர் அனுபமா. வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரியிலிருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணிகளில் அதிகாரிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்தப் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அனுபமா கண்காணித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காவலர் மட்டும் அங்கு இருக்க, பெட்டியை இறக்குவதற்காக மற்றொருவருக்காக அவர் காத்திருந்தார். ஆனால் அனுபமா சற்றும் யோசிக்காமல் ஒரு கை பிடிக்கப் பெட்டியை உள்ளே கொண்டு சென்றனர். 

திரிச்சூர் பெண் ஆட்சியர்

ஆட்சியர் உதவுவதைப் பார்த்ததும், மற்ற அதிகாரிகள், உதவுவதற்காக ஓடி வந்தனர். ஆனால் அவர்களை சைகையால் வேண்டாம் தானே கொண்டு செல்வதாக தடுத்தார் அனுபமா. இந்த வீடியோ இணையத்தில் செம்ம ஹிட் அடித்தது. பல இணையதளவாசிகள், ``இந்த இளம் அதிகாரிக்கு எங்களின் வாழ்த்துகள்” என்றும் ``இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கிறார்கள்” என்று கூறியும் பலர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.