`சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடாது!’ - சாத்வி பிரக்யாவுக்குத் தடைபோட்ட பி.ஜே.பி | BJP leadership has ordered Bhopal Lok Sabha candidate Shatri Prakya not to discuss the controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (22/04/2019)

கடைசி தொடர்பு:18:15 (22/04/2019)

`சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசக்கூடாது!’ - சாத்வி பிரக்யாவுக்குத் தடைபோட்ட பி.ஜே.பி

ர்ச்சைக் கருத்துகளை பேசக்கூடாது என போபால் மக்களவை வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு பி.ஜே.பி  தலைமை உத்தரவிட்டிருக்கிறது. 

சாத்வி

மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபால் மக்களவைத் தொகுதியில் சாத்வி பிரக்யா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். சாத்வி எனக் கூறிக்கொண்டு, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் பிரக்யா. இதனால் மத்தியப்பிரதேச பி.ஜே.பி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவரது பேச்சு நாடு முழுதும் பி.ஜே.பி-யின் கருத்தாகச் சென்றடைவதால், தலைமை இவர்மீது அதிருப்தியில் இருக்கிறது.

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த சாத்வி பிரக்யா தாக்கூர், தற்போது ஜாமீனில் உள்ளார். மேலும், தேர்தல் ஆணையமும் பிரக்யாவுக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பிவிட்டது. ``பாபர் மசூதி இடித்த சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணிலிருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சாபம் விட்டதால் மரணித்தார்'' என்றெல்லாம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிவருகிறார் பிரக்யா. பி.ஜே.பி-யில் பிரக்யா இணைந்து சில நாள்களே கடந்திருக்கின்றன. அதற்குள்ளே பிரக்யாவின் பேச்சு பி.ஜே.பி-க்கு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சாத்வி பிரக்யாவிடம், சர்ச்சைக்குரிய கருத்துகளை இனிப் பேசக்கூடாது என்று பி.ஜே.பி தலைமை உத்தரவிட்டுள்ளது.