`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்! | software engineer murders wife, three children in Ghaziabad

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:07:34 (23/04/2019)

`மன்னித்துவிடுங்கள்... அவர்களைக் கொன்றுவிட்டேன்' - உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய இன்ஜினீயர்!

வறுமையில் வாடியதால் குழந்தைகள் மற்றும் மனைவியைக் கொலை செய்துவிட்டு உறவினர்களுக்கு வீடியோ மூலம் மன்னிப்புக் கேட்டுள்ளார் ஒருவர்.

கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார். 34 வயதாகும் இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். பெங்களூருவில் வேலை செய்துவந்தவர், சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு மனைவி அஞ்சு பாலா, மூன்று குழந்தைகளுடன் காசியாபாத்தில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, நேற்று அதிகாலை சுமித் தனது குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில், ``என் குழந்தைகளையும் மனைவியையும் கொன்றுவிட்டேன். இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நானும் சயனைடு சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்" என அவர் பேசியுள்ளார். இதைப் பார்த்த சுமித்தின் தங்கை, உறவினர்களுக்கு இது தொடர்பாகத் தகவல் சொல்லியுள்ளார். 

கொலை

உடனே சுமித்தின் வீட்டுக்கு விரைந்துள்ளார் அஞ்சு பாலாவின் சகோதரர். ஆனால், அங்கு கதவு பூட்டியிருந்ததால் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அஞ்சு பாலா மற்றும் மூன்று குழந்தைகளும் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால், சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிய சுமித் அங்கு இல்லை. கொலை செய்யப்பட்ட உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் அதை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் மயக்க மருந்து கொடுத்து பின்பு அவர்களைக் குத்திக் கொன்றது தெரியவந்தது.

அஞ்சு பாலா

``குர்கான், நொய்டா போன்ற பகுதிகளில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றிய சுமித், அதன் பின்னர் பெங்களூருவில் பணியாற்றியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது பணியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் அவருக்குப் பண பிரச்னைகள் ஏற்பட்டது. கடன் வாங்கி செலவழித்து வந்தவர், பண நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வந்தார். ஆனால், ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை" என அஞ்சு பாலாவின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சுமித்தை கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க