இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரக் காவல்படைக்கு உச்சகட்ட அலர்ட்! | central govt high Alert to indian Coast Guard

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:07:31 (23/04/2019)

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரக் காவல்படைக்கு உச்சகட்ட அலர்ட்!

 

இலங்கை குண்டு  வெடிப்பு

லங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படைக்கு மத்திய அரசு உச்சகட்ட  அலர்ட்  கொடுத்துள்ளது. 

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் இதற்குக் காரணம் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்தக் கோரமான தாக்குதலைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையை உஷார்படுத்தியுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படை  தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது. கடற்படை எல்லைக்குள் சந்தேகப்படக்கூடிய படகுகளை அடையாளம் காணுவதற்கு பல கப்பல்கள் மற்றும் டோர்னியர்கள் விமானம் என 24 மணி நேர ரோந்துப் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய கடலோர காவல் படை

 2008-ம் ஆண்டு மும்பைத் தாக்குதல் கடல் மார்க்க வழியாக வந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இலங்கையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதால் இந்தியாவிலும் கடல் மார்க்கமாக வரக்கூடும்  என்பதால், இந்தத் தீவிர பாதுகாப்புப் பணியை  மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.