பி.ஜே.பி-யில் இணைந்தார் இந்தி நடிகர் சன்னி தியோல்! | Hindi actor Sunny Deol joins BJP

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (23/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (23/04/2019)

பி.ஜே.பி-யில் இணைந்தார் இந்தி நடிகர் சன்னி தியோல்!

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் இன்று பி.ஜே.பி. மூத்தத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். புதுடெல்லியில் உள்ள பி.ஜே.பி. தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சன்னி தியோல்

பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைவதும், அவர்களை அந்தக் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களாக அறிவிப்பதும் அண்மைக்காலமாக வாடிக்கையாகிவிட்டது.

அந்தவகையில், நடிகர் சன்னி தியோல் இன்று பி.ஜே.பி-யில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ``பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாட்டுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்; எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரின் ஆட்சி நாட்டுக்குத் தேவையாகிறது" என்றார். பஞ்சாப் மாநிலத்திலிருந்து மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் சன்னி தியோல் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பி.ஜே.பியில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், அக்கட்சி சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க