சீனா பாலில் நச்சுப் பொருள்! - இறக்குமதிக்கான தடையை நீட்டிக்கும் இந்தியா | India Extends Ban On Import Of Milk Products

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (24/04/2019)

கடைசி தொடர்பு:11:45 (24/04/2019)

சீனா பாலில் நச்சுப் பொருள்! - இறக்குமதிக்கான தடையை நீட்டிக்கும் இந்தியா

சீனாவில் தயாரிக்கப்படும் சில பால் பொருள்களில், 'மெலாமின்' என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பதால், அவற்றை இறக்குமதிசெய்ய இந்தியா தடை விதித்திருந்தது. மெலாமின் கலந்த பால் மற்றும் அந்தப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் உணவுப்பொருள்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். தற்போது இந்தத் தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பால் பொருள்கள்

மெலாமின் வேதிப்பொருளை, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன உரங்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். பால் பொருள்களில் மெலாமின் கலந்திருப்பதைப் பரிசோதிக்கும் அளவிற்கு துறைமுகத்திலுள்ள ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை. அப்படி தரம் உயர்த்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வகங்களைத் தரம் உயர்த்துவதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை.

பால்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சீனாவிலிருந்து பால் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்ததே இல்லை. இருந்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் கடந்த 2008 முதல் இந்தத் தடை கொண்டுவரப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. உலக அளவில், அதிகமாக பால் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கே ஆண்டுக்கு 15 கோடி டன் பால் உற்பத்தியாகிறது.